தங்கவயலில் ஆபாச பேனர் பா.ஜ., மகளிர் அணி எச்சரிக்கை
தங்கவயலில் ஆபாச பேனர் பா.ஜ., மகளிர் அணி எச்சரிக்கை
ADDED : ஜூலை 03, 2026 04:35 AM
தங்கவயல்: ''ராபர்ட்சன்பேட்டை இதய பகுதியாக விளங்கும் சுராஜ்மல் சதுக்கத்தில், சாலை போக்குவரத்து சிக்னல் உள்ள இடத்தில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள ஆபாச பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்,'' என கோலார் மாவட்ட பா.ஜ., மகளிர் பிரிவு துணைத் தலைவர் வேணி பாண்டியன் கூறியுள்ளார்.
நேற்று அவர் கூறியுள்ளதாவது:
பெண்களை இழிவு படுத்தும் வகையில் வர்த்தகத்திற்காக தங்கவயலின் மையப் பகுதியான ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கத்தில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
இந்த சதுக்கத்தின் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடமாடுகின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள பேனர், கலாசார சீரழிவு.
அந்த பேனரை, நகராட்சி ஆணையர் விரைந்து அகற்ற வேண்டும். தாமதம் செய்தால், தங்கவயலில் உள்ள அனைத்து மகளிர் அமைப்பினரையும் அழைத்து போராட வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
