ADDED : ஜூலை 02, 2026 11:12 PM
ஆன்மிகம்
கோவில் 154ம் ஆண்டு விழா ஸ்ரீ கா சி விஸ்வநாதேஸ்வரர் கோவிலின் 154ம் ஆண்டு விழாவை ஒட்டி, கோ பூஜை - மாலை 5:00 மணி; கலச ஸ்தாபனை, ஹோமம், பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்கல் - 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சி வாஜி நகர். தொடர்புக்கு: 96325 06092
மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின், மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
கும்பாபிஷேகம் கும்பாபிஷேகத்தை ஒட்டி, யாக பூஜை, மூர்த்திகளுக்கு ஹோமம், காப்பு கட்டுதல், ஸ்பர்ஷா சாந்தி பூஜை, கலா ஷேத்ரா ஹோமம், கலச ஆவாஹனம், கலா ஹோமம் - காலை 6:00 மணி; விமான கோபுர மகா கும்பாபிஷேகம் - மதியம் 12:35 முதல் 12:50 மணிக்குள்; மூலவருக்கு திருக்குட நன்னீராட்டு விழா, மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீவரசித்தி விநாயகா கோவில், தம்புஷெட்டி கார்டன், காக்ஸ் டவுன்.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது மகிழ்ச்சியாக வாழ... வாழும் கலை அமைப்பு சார்பில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான நிகழ்ச்சி - காலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: போபிஸ் கனோபி, 1 ஏ, ஹூன்சூர் சாலை, விஜயநகர், மைசூரு.
ஆயுர்வேத முகாம் காவேரி ஆயுர்வேத கல்லுாரி, மருத்துவமனை சார்பில் இலவச சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம் அருகில், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 91317 99317.
