UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 10:36 PM
அ நிறம் | அளவு
சித்தராமையா தொடர்பான வீடியோ வெளியானது பற்றி விசாரிக்கும் சி.சி.பி., போலீசார், ம.ஜ.த., சமூக ஊடக பிரிவு நிர்வாகியான சங்கர் என்பவரை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். இதற்கு ம.ஜ.த., தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘‘இந்த வழக்கின் உண்மையான அயோக்கியனை விட்டுவிட்டு, அப்பாவியிடம் விசாரணை நடத்துவது சரியல்ல. இந்த வழக்கில் நான் தான் கேள்வி எழுப்பினேன். தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு போலீசை அனுப்பி வையுங்கள். இன்னொரு ஊடக பிரிவு நிர்வாகி மோகன் என்பவரையும், போலீஸ் துன்புறுத்துவதாக தகவல் கிடைத்தது. இதை எல்லாம் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன்,’’ என்றார்.
