/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருந்து கடைகளை மூட எதிர்ப்பு மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம்
/
மருந்து கடைகளை மூட எதிர்ப்பு மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம்
மருந்து கடைகளை மூட எதிர்ப்பு மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம்
மருந்து கடைகளை மூட எதிர்ப்பு மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம்
ADDED : மே 30, 2025 11:12 PM
மைசூரு: மைசூரில் அரசு மருத்துவமனைகளின் வளாகத்தில் உள்ள, குறைந்த விலை மருந்துக் கடைகளை மூடும், மாநில அரசின் முடிவை கண்டித்து, பா.ஜ.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
மைசூரின் கே.ஆர்.மருத்துவமனை முன், கே.ஆர்., தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா, மைசூரு நகர பா.ஜ., தலைவர் நாகேந்திரா, துணை மேயர் ரூபா உட்பட, பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்று, எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா பேசியதாவது:
மத்திய அரசு திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளின் வளாகத்தில் அமைக்கப்பட்ட குறைந்த விலை மருந்து கடைகளை மூட, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளது.
'அரசு மருத்துவமனைகளில், நாங்கள் இலவசமாக மருந்துகள் கொடுக்கிறோம். நோயாளிகள் குறைந்த விலை மருந்துக்கடைகளுக்கு எதற்காக செல்ல வேண்டும்?' என, மாநில அரசு கேள்வி எழுப்புகிறது.
சட்டசபையில் இது தொடர்பாக, அரசு தெளிவாக பதில் அளிக்கவில்லை. ஊடகத்தினர் கேள்வி எழுப்பினால், சுகாதாரத்துறை அமைச்சர், பொறுப்பின்றி பதில் அளிக்கிறார். எந்த காரணத்தை கொண்டும், குறைந்த விலை மருந்துக் கடைகளை மூடக்கூடாது.
குறைந்த விலை மருந்துக் கடைகளின் பெயர் பலகையில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் இருப்பதை, காங்கிரசாரால் சகிக்க முடியவில்லை. இதே காரணத்தால் இந்த மருந்துக் கடைகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.
இந்திரா உணவகத்தில் யாருடைய போட்டோவை போட்டுள்ளனர்?
இவ்வாறு அவர் பேசினார்.
தன் உத்தரவை, மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சிகிச்சைக்காக, 1,200க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. இவற்றில் 800க்கும் மேற்பட்ட மருந்துகள், குறைந்த விலை மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இந்த கடைகள் ஏழைகளுக்காக இருப்பவை. இதை மூடினால், நாங்கள் தீவிர போராட்டம் நடத்துவோம்.
- எல்.நாகேந்திரா,
மாவட்ட பா.ஜ., தலைவர்,
மைசூரு