எம்.பி., பிரிஜேஷ் சவுடா மீது பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி
எம்.பி., பிரிஜேஷ் சவுடா மீது பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி
ADDED : மே 17, 2026 11:28 PM
மங்களூரு: தட்சிணகன்னடா லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் சவுடா மீது, கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தட்சிணகன்னடா மாவட்டத்தின், கார்கலா - மூடபிதரே - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையின், பன்னட்கா சாலையில் தரமற்ற பணிகள் நடக்கின்றன. அங்கு சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் இந்த சாலையில் பயணிக்கவே, மக்கள் அஞ்சும் சூழ்நிலை உள்ளது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கன, கோரிக்கை விடுப்பதற்காக, பா.ஜ., தொண்டர்கள், பொது மக்கள் நேற்று காலை எம்.பி., பிரிஜேஷ் சவுடா இல்லத்துக்கு சென்றனர்.
அவரிடம் பிரச்னையை விவரித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் மக்களின் பிரச்னையை உணராமல், அலட்சியமாக பேசி அனுப்பியுள்ளார். நடவடிக்கை எடுப்பதாக கூறவும் இல்லை.
இவரது செயலால், தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'மக்கள் மீது அக்கறை இல்லாத, இவரை போன்றவர் நமக்கு மக்கள் பிரதிநிதியாக இருப்பது துரதிர்ஷ்டவசம்' என, சமூக வலைதளத்தில் பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
