sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பா.ஜ., வெளியிட்ட விளம்பரம் ; பிரியங்க் கார்கே எதிர்ப்பு

/

 பா.ஜ., வெளியிட்ட விளம்பரம் ; பிரியங்க் கார்கே எதிர்ப்பு

 பா.ஜ., வெளியிட்ட விளம்பரம் ; பிரியங்க் கார்கே எதிர்ப்பு

 பா.ஜ., வெளியிட்ட விளம்பரம் ; பிரியங்க் கார்கே எதிர்ப்பு


ADDED : பிப் 07, 2026 06:28 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக பா.ஜ.,வினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில், மஹாத்மா காந்தி தனது தடியால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில முதல்வர் சித்தராமையாவை அடிப்பது போன்ற விளம்பரத்தை வெளியிட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பேட்டி:

எங்கள் அரசு கொண்டு வந்த ஊரக வேலை உறுதி திட்டத்தால், ஆண்டின், 365 நாட்களும் வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'விபி ஜி ராம் ஜி' திட்டம், 60 நாட்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கும்.

புதிய திட்டத்தால், தாங்கள் விரும்பிய இடத்தில் மக்கள் பணி செய்ய முடியாமல், பணக்காரர்களின் நிலத்தில் குறைந்த கூலியில் பணி செய்ய நேரிடும். புதிய திட்டம் வாயிலாக, மீண்டும் அடிமைத்தனம் முறை கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us