தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாக்குறுதி திட்டங்களை நிறுத்த பா.ஜ., சதி துணை முதல்வர் சிவகுமார் பரபரப்பு தகவல்

 வாக்குறுதி திட்டங்களை நிறுத்த பா.ஜ., சதி துணை முதல்வர் சிவகுமார் பரபரப்பு தகவல்

 வாக்குறுதி திட்டங்களை நிறுத்த பா.ஜ., சதி துணை முதல்வர் சிவகுமார் பரபரப்பு தகவல்


ADDED : ஏப் 08, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: வாக்குறுதி திட்டங்களை நிறுத்த, பா.ஜ., சதி செய்வதாக, துணை முதல்வர் சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இரு தொகுதியிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.

ஆனாலும், வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், புதிதாக நிதி ஒதுக்கினால், தங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.

இரு தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்திற்கு கவனத்திற்கு வராமல் அரசு நிதி ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாநில தலைமை செயலர் ஷாலினிக்கு, தேர்தல் அதிகாரி பவன் திவான் கடிதம் எழுதி உள்ளார்.

இதுபற்றி துணை முதல்வர் சிவகுமார், தாவணகெரேயில் நேற்று அளித்த பேட்டி:

வாக்குறுதி திட்டங்களுக்கு நிதி விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையம் மூலம், மாநில தலைமை செயலருக்கு பா.ஜ., கடிதம் எழுத வைத்து உள்ளது. வாக்குறுதி திட்டங்களை நிறுத்த பா.ஜ., சதி செய்கிறது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பர்.

கடந்த மாதத்திற்கான பணம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மாதம் வெளியிடவில்லை. தேர்தலுக்கு பின் பணம் விடுவிக்கப்படும். வாக்குறுதி திட்டங்கள் எக்காரணத்திற்கும் நிறுத்தப்படாது. இரு தொகுதியிலும் பிரசாரம் அமைதியாக நடந்து முடிந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாலை 6:00 மணியுடன் பகிரங்க பிரசாரம் முடிந்தது. பாகல்கோட்டில் சித்தராமையாவும், பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும், தாவணகெரேயில் சிவகுமாரும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us