/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வினருக்கு மஞ்சள் காமாலை முதல்வர் சித்தராமையா விமர்சனம்
/
பா.ஜ.,வினருக்கு மஞ்சள் காமாலை முதல்வர் சித்தராமையா விமர்சனம்
பா.ஜ.,வினருக்கு மஞ்சள் காமாலை முதல்வர் சித்தராமையா விமர்சனம்
பா.ஜ.,வினருக்கு மஞ்சள் காமாலை முதல்வர் சித்தராமையா விமர்சனம்
ADDED : அக் 04, 2025 11:10 PM

பெலகாவி: ''வாக்குறுதி திட்டங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தவில்லை. பா.ஜ.,வினருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதால், பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
'நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியை, தன் வாக்குறுதி திட்டங்களுக்கு அரசு பயன்படுத்துகிறது' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, பெலகாவியில் சாம்ப்ரா விமான நிலையத்தில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் வார்த்தை அர்த்தமற்றவை. வாக்குறுதி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் வாக்குறுதி திட்டங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தவில்லை.
பா.ஜ.,வினருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதால், பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது.
கர்நாடக அரசு அறிவித்த வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இப்போது, ஹரியானா, புதுடில்லி, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பா.ஜ., எங்கள் வாக்குறுதி திட்டங்களை பின்பற்றுகிறது. எனவே நாங்கள் சொன்னதை செய்வோம்.
எங்கள் கட்சியின் உள் விவகாரம் குறித்து கவலைப்பட அவர்கள் யார்? அவரவர் வேலையை அவர்கள் செய்ய வேண்டும். பா.ஜ.,வின் இத்தகைய அறிக்கைகளுக்கு பதிலளிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.