/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.,வின் பகல் - இரவு போராட்டம் துவக்கம்
/
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.,வின் பகல் - இரவு போராட்டம் துவக்கம்
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.,வின் பகல் - இரவு போராட்டம் துவக்கம்
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.,வின் பகல் - இரவு போராட்டம் துவக்கம்
ADDED : ஏப் 03, 2025 07:44 AM

பெங்களூரு : காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக, பா.ஜ.,வின் பகல் - இரவு போராட்டம், பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று துவங்கியது.
கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையை நாளுக்கு, நாள் உயர்த்திக் கொண்டே செல்கிறது. ஒவ்வொன்றுக்கும் வரி வசூலிக்க ஆரம்பித்து உள்ளது. இதனால் மக்கள் நொந்து போய் உள்ளனர்.
இத்தகைய காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் பா.ஜ., நேற்று முதல் பகல் - இரவு போராட்டம் துவங்கியது. போராட்டத்தை துவக்கி வைத்து, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
ஐந்து வாக்குறுதித் திட்டங்களையும் அமல்படுத்தியதாக, ஆட்சியில் இருப்பவர்கள் வெற்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் வாக்குறுதித் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை.
மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துகின்றனர். இப்போது ஆட்சியில் இருப்பது மனிதாபிமானமற்ற அரசு.
தன் முதல்வர் நாற்காலியின் பாதுகாப்பின்மை பற்றி, சித்தராமையா கவலைப்படுகிறார். ஏ.சி., அறையில் அமர்ந்து இருப்பதை விட்டுவிட்டு அவர் வெளியே வர வேண்டும்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். கடந்த காலத்தில் மன்னர்கள், மாறுவேடத்தில் சென்று குடிமக்களிடம் நலன் விசாரிப்பர். பின், மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவர்.
மஹாராஜா என்று தன்னை நினைக்கும் சித்தராமையாவுக்கு, நாற்காலியின் பாதுகாப்பு குறித்து பயம் இருந்தால், துணை முதல்வர் சிவகுமாரையும் தன்னுடன் அழைத்துச் செல்லட்டும்.
ஏழைகள், விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
வரும் 7ம் தேதி முதல் மக்கள் யாத்திரை துவங்குவோம். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி துவக்கி வைப்பார். அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்வதில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உள்ளனர்.
மறுபுறம் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து பயன்படுத்துகின்றனர். ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசு இது. வரும் நாட்களில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
எங்கள் மீது 40 சதவீத பொய் கமிஷன் குற்றச்சாட்டு கூறிய, சிவகுமார் பதவி விலக வேண்டும். அரசியலமைப்பு அவமதிக்கும் பணியை சிவகுமார் செய்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீராமுலு, ரவி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.