/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில காங்., அரசை கண்டித்து பா.ஜ., யாத்திரை இன்று துவக்கம்
/
மாநில காங்., அரசை கண்டித்து பா.ஜ., யாத்திரை இன்று துவக்கம்
மாநில காங்., அரசை கண்டித்து பா.ஜ., யாத்திரை இன்று துவக்கம்
மாநில காங்., அரசை கண்டித்து பா.ஜ., யாத்திரை இன்று துவக்கம்
ADDED : ஏப் 07, 2025 08:00 AM

பெங்களூரு : மாநில அரசின் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர் குலைவு, ஆளுங்கட்சியின் தோல்வியை கண்டித்து, 'மக்கள் ஆக்ரோஷம் யாத்திரை'யை பா.ஜ., இன்று துவக்கவுள்ளது.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, நாளை (இன்று) மதியம் போராட்டத்தை துவக்குவோம். யாத்திரையை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி துவக்கி வைப்பார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அராஜக சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
இதை கண்டித்து பா,ஜ., போராட்டம் நடத்தும். அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் ஆக்ரோஷம் யாத்திரை' என்ற பெயரில், போராட்டம் நடத்தப்படும். அரசுக்கு பாடம் புகட்டும் வரை, நாங்கள் ஓயமாட்டோம்.
பா.ஜ., தொண்டர் வினய் சோமய்யா தற்கொலை செய்யவில்லை. இது திட்டமிட்ட கொலை. தவறு செய்தவர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும். நியாயமான விசாரணை நடக்க, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். இது குறித்து, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவோம்.
முதல்வர் சித்தராமையாவுக்கு, நாற்காலி தள்ளாடுவதாக தோன்றினால் உள் இட ஒதுக்கீடு நினைவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

