/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., முனிரத்னா திடீர் சந்திப்பு
/
துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., முனிரத்னா திடீர் சந்திப்பு
துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., முனிரத்னா திடீர் சந்திப்பு
துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., முனிரத்னா திடீர் சந்திப்பு
ADDED : பிப் 25, 2026 07:30 AM

பெங்களூரு : துணை முதல்வர் சிவகுமாரை, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா ஆகியோர், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர்.
பலாத்கார வழக்கில் சிறை சென்ற முனிரத்னா, அதற்கு சிவகுமாரே காரணம் என்று பகிரங்கமாக கூறினார். பொது இடத்தில் சந்தித்தாலும், இருவரும் முகம் கொடுத்து பேசி கொள்வது இல்லை.
இந்நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் சிவகுமாரை, முனிரத்னா நேற்று காலை சந்தித்தார். தன் வீட்டிற்கு முனிரத்னா வந்த போது வாசல் அருகே நின்ற சிவகுமார், முனிரத்னாவின் தோளில் தட்டிக் கொடுத்தும், கை குலுக்கியும் வரவேற்றார். இருவரும் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின், முனிரத்னா அளித்த பேட்டி:
ஆர்.ஆர்.நகர் தொகுதியில் மூன்று ஆண்டுகளாக, எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இதுகுறித்து சட்டசபை கூட்டத்தொடரில் பேசினேன். அதுபற்றி விவாதிக்க நேரம் கொடுப்பதாக, சிவகுமார் கூறினார். நேற்று முன்தினம் அவரது அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனால், நேற்று அவரை சந்தித்தேன். தொகுதிக்கு என்னென்ன வேண்டும் என்று, எனது கைப்பட கடிதம் எழுதி கொடுத்து உள்ளேன்.
தே வையான நிதியை ஒதுக்குவதாக அவர் உறுதி அளித்து உள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. வேறு எந்த விஷயத்தை பற்றியும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
தொகுதி நிதிக்காக மூன்று ஆண்டுகளாக காத்து உள்ளேன். வரும் நாட்களிலும் காத்திருப்பேன். நான் ஏற்கனவே கூறியது போன்று, என் தொகுதியின் வளர்ச்சிக்காக யாருடைய காலில் விழவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

