தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது கடினம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் புலம்பல்

 பொது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது கடினம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் புலம்பல்

 பொது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது கடினம்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் புலம்பல்


ADDED : பிப் 25, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார் : ''பொது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்வதும், இருப்பதும் கடினம்,'' என, சட்டசபை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், 76.

அவர் அளித்த பேட்டி:

நான் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றிய காலத்தில், சீனிவாசப்பூர் தொகுதி மக்களுக்கு எந்த கெட்டதும் செய்யவில்லை. என் குடும்பத்தை விட தொகுதி மக்களை தான் அதிகம் நேசித்தேன். ஆனால், எதையும் யோசித்து பார்க்காமல், என்னை தோற்கடித்து தனிமையில் விட்டு விட்டனர்.

தோல்வியை நினைத்து கவலைப்படாமல் இருக்க, நான் ஒன்றும் பொம்மை இல்லை. உணர்ச்சி உள்ள மனிதன் தான். தோல்வியால் ஏற்பட்ட சலிப்பு, வலி, சோகத்தால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பொது இடங்களுக்கு வரவில்லை.

கடந்த, 2023 பிப்ரவரியில் என் மனைவி மரணம் அடைந்தார். அவர் என்னுடன், 47 ஆண்டுகள் ஒன்றாக பயணித்தார். ஒரு நாள் கூட சினிமாவுக்கு அழைத்து செல்லுங்கள், புதிய சேலை வாங்கி கொடுங்கள் என்று கேட்டது இல்லை. அரசு காரில் ஒரு முறை கூட அமர்ந்தது இல்லை. அரசு பங்களாவை கூட வேண்டாம் என்றே கூறினார். இந்த சமூகத்தில் நான் மரியாதையுடனும், நேர்மையாகவும், தைரியமாகவும் வாழ, அவர் தான் காரணம். தற்போது, அவர் என்னுடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

எனக்கு ஜாதி இல்லை. அதிகார ஆசையும் இல்லை. ஆனால், பொது வாழ்க்கையில் இருப்போர் நேர்மையாகவும், அதிகார ஆசை இல்லாமலும் வாழ்வதும் கடினம் என்ற நிலை உருவாகி உள்ளது. என், 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல ஏற்ற, தாழ்வுகளை கண்டு உள்ளேன். என், 28வது வயதில் நான் எம்.எல்.ஏ., ஆனேன். ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து மக்களுக்கு செய்தது ஏராளம். அவர்கள் ஏன் என் சேவையை புரிந்து கொள்ளவில்லை?.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us