/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் சுதீப்புக்கு குறி வைக்கும் அரசு பா.ஜ., சலவாதி நாராயணசாமி புகார்
/
நடிகர் சுதீப்புக்கு குறி வைக்கும் அரசு பா.ஜ., சலவாதி நாராயணசாமி புகார்
நடிகர் சுதீப்புக்கு குறி வைக்கும் அரசு பா.ஜ., சலவாதி நாராயணசாமி புகார்
நடிகர் சுதீப்புக்கு குறி வைக்கும் அரசு பா.ஜ., சலவாதி நாராயணசாமி புகார்
ADDED : அக் 09, 2025 05:20 AM

பெங்களூரு : “மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பிக்பாஸ் வீட்டுக்கு 'சீல்' வைத்தது சரியல்ல. இதன் மூலம் மாநில அரசு, நடிகர் சுதீப்பை குறிவைத்துள்ளது,'' என, பா.ஜ.,வை சேர்ந்த, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி வலியுறுத்தினார்.
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, நேற்று மதியம் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் பிரச்னைகளை கேட்டறிந்தார். பின், அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏழை நோயாளிகளால், அதிக பணம் கொடுத்து, வெளியே சென்று மருந்துகள் வாங்க முடியாது. இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. சில பகுதிகளில் மூத்த டாக்டர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை என, நோயாளிகள் புகார் கூறினர். எம்.பி.பி.எஸ்., பயிற்சி டாக்டர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கின்றனர்.
பெரும்பாலான மூத்த டாக்டர்கள், சில நேரங்களில் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதை அரசு தடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிப்பது டாக்டர்களின் கடமை.
இவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.
விக்டோரியா மருத்துவமனையில், டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை ஏற்படாமல், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் துாய்மையும் இல்லை.
சிகிச்சை அளிக்கும் இடத்தில், துாய்மை இல்லாவிட்டால், நோய்கள் பரவும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பிக்பாஸ் வீட்டுக்கு 'சீல்' வைத்தது சரியல்ல. 'சீல்' வைப்பதற்கு இதென்ன தொழிற்சாலையா? பிக்பாஸ் வீட்டுக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் என்ன சம்பந்தம்? உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷ வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அத்தகைய தொழிற்சாலைகளை, ஏன் மூடவில்லை?
பிக் பாஸ் வீடு சாதாரணமானது. இந்த வீட்டுக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் சான்றிதழ் வேண்டுமா? இதன் மூலம் மாநில அரசு, நடிகர் சுதீப்பை குறிவைத்துள்ளது. இத்தகைய செயலை, மக்கள் சகிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கூறினார்.