/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊழல்வாதிக்கு அரசியல்வாதிகள் ஆதரவு பா.ஜ.,வின் ரமேஷ் குற்றச்சாட்டு
/
ஊழல்வாதிக்கு அரசியல்வாதிகள் ஆதரவு பா.ஜ.,வின் ரமேஷ் குற்றச்சாட்டு
ஊழல்வாதிக்கு அரசியல்வாதிகள் ஆதரவு பா.ஜ.,வின் ரமேஷ் குற்றச்சாட்டு
ஊழல்வாதிக்கு அரசியல்வாதிகள் ஆதரவு பா.ஜ.,வின் ரமேஷ் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 03, 2025 08:01 AM

பெங்களூரு : “லஞ்சம் பெறும்போது, ஊழல் ஒழிப்புப் படையிடம் சிக்கி, சிறைக்கு சென்ற மேற்கு மண்டல கமிஷனர் அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களை பிளாக்மெயில் செய்து, மாநகராட்சி நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஊழல்வாதிக்கு ஆதரவாக முதல்வர் சித்தராமையா உட்பட பலர் நிற்கின்றனர்,” என, பெங்களூரு தெற்கு பா.ஜ., முன்னாள் தலைவர் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரின், காந்தி நகர் தொகுதியில் கிருஷ்ணா, துப்புரவு தொழிலாளராக பணியாற்றினார். இவரை சட்டவிரோதமாக ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டராக நியமித்துள்ளனர். இவர் அரசியல்வாதிகளிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தை சீர்குலைக்கிறார்.
லஞ்சம் பெறும்போதே, ஊழல் ஒழிப்பு படையிடம் சிக்கிய கிருஷ்ணா, சிறைக்குச் சென்று வந்தவர். பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்தார். இவரை மீண்டும் ஹெல்த் இன்ஸ்பெக்டராக நியமித்துள்ளனர்.
தன் மனைவி மற்றும் மைத்துனருடன் காந்தி நகர் தொகுதியில் மட்டுமே, 'ஷிப்டு'களில் குப்பை அள்ளும் பணியை செய்ததாக, போலியான ஆவணங்களை உருவாக்கி, மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் பில் தொகை பெற்றதாக, கிருஷ்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது.
தன் காட் பாதர் குடும்பத்தினரின் பெயரை கூறிக்கொண்டு, மேற்கு மண்டலத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்களை 'பிளாக்மெயில்' செய்கிறார். கிருஷ்ணாவின் சட்டவிரோத செயல்கள் குறிது, அனைத்து அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், இவருக்குள்ள அரசியல் செல்வாக்கை நினைத்து, மவுனமாக வேடிக்கை பார்க்கின்றனர்.
கிருஷ்ணா மற்றும் அமர் நாராயண் ஆகியோரை, ஆழ்நிலை பரிசோதனைக்கு உட்படுத்தினால், அவர்களின் ஊழல் வெளிச்சத்துக்கு வரும். இத்தகைய ஊழல்வாதிக்கு முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா, அமைச்சர் தினேஷ்குண்டுராவ் ஆதரவாக உள்ளனர். இனியாவது விழித்துக் கொண்டு, ஊழல்வாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

