தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாநில அரசு திவாலாகி விட்டது; பா.ஜ., விஜயேந்திரா குற்றச்சாட்டு

மாநில அரசு திவாலாகி விட்டது; பா.ஜ., விஜயேந்திரா குற்றச்சாட்டு

மாநில அரசு திவாலாகி விட்டது; பா.ஜ., விஜயேந்திரா குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 07, 2025 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு : ''காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயரெட்டி, வாக்குறுதி திட்டம், மாநிலத்தின் நிதி சுமையாக மாறிவிட்டது என்கிறார். வாக்குறுதி மூலம் மாநில அரசு திவாலாகி விட்டது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரு வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகள் பெற்றார். முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்வதற்கு முன்னதாகவே, அவரை புதுடில்லிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே, சித்தராமையா ராஜினாமா செய்யப்போவது உறுதி.

சித்தராமையாவின் ராஜினாமாவுக்கு பின், அவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அகில இந்திய காங்கிரஸ் தேசிய குழு தலைவராக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவே மாநிலத்தில் முதல்வர் மாற்றத்துக்கான அறிகுறி.

வாக்குறுதி திட்டங்களை அறிவித்தும், பா.ஜ.,வுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியும் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது பெட்ரோல், டீசல், பால் உட்பட அன்றாட பொருட்கள் விலை உயர்வு; ஊழல் அதிகரித்து உள்ளதன் மூலம், சாமான்ய மக்களின் பாக்கெட்களுக்கு வேட்டு வைக்கிறது.

'முடா' வழக்கில் 14 நிலங்களை திருப்பி அளித்ததன் மூலம், இதில் ஊழல் நடந்துள்ளது என்பதை முதல்வரின் மனைவி மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

இவ்விகாரத்தில் ஓராண்டுக்கு முன்னரே, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆணவத்துடன் ஆட்சியில் தொடர்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு பின், காந்தராஜ் தாக்கல் செய்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்தினார். இப்போது மீண்டும் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

வாக்குறுதி திட்டத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது அக்கட்சியை சேர்ந்த ராயரெட்டி, வாக்குறுதி திட்டம், மாநிலத்தின் நிதி சுமையாக மாறிவிட்டது என்கிறார். இத்திட்டம் தேவையா, இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் அரசு விவாதம் நடத்தி வருகிறது. வாக்குறுதி மூலம் மாநில அரசு திவாலாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us