ADDED : ஏப் 22, 2026 01:47 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவுக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாக, முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான ராஜண்ணா பீதி கிளப்பி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா உதவியற்றவராக மாறிவிட்டார். இதை எனது அரசியல் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, அவருக்கு யாரோ சூனியம் வைத்து விட்டது போல தோன்றுகிறது.
கேரளத்தில் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் என உணர்கிறேன். இது பற்றி நான் விரிவாக விசாரிப்பேன். முன்னதாக, சூனியம் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தது. தற்போது, சூனியத்தை நம்ப தொடங்கி விட்டேன். சித்தராமையா விரைவில் குணமடைவார்.
அரசியல் என்பது தேங்கிய நீர் கிடையாது. ஓடிக்கொண்டிருக்கும் நீர். ஓடும் நீர் தான் துாய்மையாக இருக்கும். அது போல, அரசியலும் துாய்மையானதே. வரும் மே மாதம் மாநிலத்தில் அரசியல் மாற்றங்கள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
