UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 11:24 PM
மங்களூரு: கிராமத்தில் வனத்துறை வைத்திருந்த கூண்டில், அரிய வகை கருஞ்சிறுத்தை சிக்கியது.
தட்சிண கன்னடா, பெல்தங்கடியின், ஷிர்சாலு கிராமத்தின், மனிலா என்ற இடத்தில் சில நாட்களாக சிறுத்தை நடமாடியது. கிராமத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிறுத்தை நடமாடிய, பத்மநாபா என்பவரின் வீட்டு அருகில், வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.
நேற்று முன் தினம் நள்ளிரவு, உணவு தேடி, கிராமத்துக்கு வந்த அரிய வகை கருஞ்சிறுத்தை கூண்டில் சிக்கியது. காலையில் இதை பார்த்த கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது இரண்டு வயதான ஆண் சிறுத்தையாகும். இதை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.
அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பார்வையிட்டனர்.இதற்கு மருத்துவ பரிசோதனை செய்த பின், அடர்ந்த வனப்பகுதியில்கொண்டு விடுவதாக, வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
