தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்., சிறையில் மீண்டும் அடைக்கப்பட்ட பிரஜ்வல்

பெங்., சிறையில் மீண்டும் அடைக்கப்பட்ட பிரஜ்வல்

பெங்., சிறையில் மீண்டும் அடைக்கப்பட்ட பிரஜ்வல்


UPDATED : அக் 13, 2026 12:00 AM

ADDED : அக் 12, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:00 AM ADDED : அக் 12, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார்.

ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 35. பலாத்கார வழக்குகளில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரை, பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு மாற்ற, சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார், கடந்த 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அன்றைய தினமே, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெலகாவிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

துமகூரின் சிரா பகுதியில் சென்றபோது, சிறை துறை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, பிரஜ்வலை அழைத்து சென்ற போலீசாருக்கு அழைப்பு சென்றது. பிரஜ்வலை மீண்டும் பரப்பன அக்ரஹாராவில் அடைக்கும்படி கூறினார்; அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான தகவல் நேற்று வெளியானது.

பிரஜ்வல் தொடர்பான பலாத்கார வழக்குகள், பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கின்றன. அவரை பெலகாவி சிறைக்கு மாற்றினால், விசாரணைக்கு அழைத்து வருவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், பெலகாவி சிறை உள்ள மண்டல சிறை துறை டி.ஐ.ஜி., சோமசேகர், கைதியை தப்பிக்க வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதாலும், வி.ஐ.பி., கைதியான பிரஜ்வலை கண்காணிக்க, சரியான நபர் இல்லாததாலும், பிரஜ்வல் மீண்டும் பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டு உள்ளதாக, சிறை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனாலும், ‘பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் கொடுத்த அழுத்தத்தால் தான், பிரஜ்வல் பெலகாவி சிறைக்கு மாற்றப்படவில்லை’ என்றும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us