/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நீல நிறத்தில் முட்டையிட்ட நாட்டு கோழி
/
நீல நிறத்தில் முட்டையிட்ட நாட்டு கோழி
ADDED : ஆக 27, 2025 10:42 PM

தாவணகெரே : பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை காண மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், நல்லுார் கிராமத்தில் வசிப்பவர் சையத் நுார். இவர் கோழிகள் வளர்க்கிறார். இவரிடம், 10 நாட்டு கோழிகள் உள்ளன. அதன் முட்டைகளை விற்பனை செய்கிறார்.
நேற்று முன்தினம் காலை, முட்டைகளை எடுக்க, கோழிகள் கூடுக்கு சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். நாட்டு கோழிகளில் ஒன்று, வெள்ளை நிறத்துக்கு பதிலாக, நீல நிறத்தில் முட்டையிட்டிருந்தது.
உடனடியாக, கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த அதிகாரிகளும் ஆச்சரியம் அடைந்தனர். முட்டை நீல நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்கின்றனர். முட்டை மேற்புற ஓடு மட்டுமே, நீல நிறத்தில் உள்ளது.
உட்புறத்தில் வழக்கமான நிறத்தில் உள்ளது. நீல நிற முட்டையை காண, சுற்றுப்புறங்களில் இருந்து, மக்கள் வருகின்றனர். நீல நிற முட்டையிட்ட கோழியை, ஆய்வுக்கு உட்படுத்த கால்நடை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.