/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நந்தினி' பார்லருக்குள் புகுந்த பி.எம்.டி.சி., பஸ்
/
'நந்தினி' பார்லருக்குள் புகுந்த பி.எம்.டி.சி., பஸ்
'நந்தினி' பார்லருக்குள் புகுந்த பி.எம்.டி.சி., பஸ்
'நந்தினி' பார்லருக்குள் புகுந்த பி.எம்.டி.சி., பஸ்
ADDED : அக் 07, 2025 04:48 AM
பெங்களூரு: 'நந்தினி' பார்லருக்குள் பி.எம்.டி.சி., பஸ் புகுந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது.
பி.எம்.டி.சி., பஸ்கள் பழுதடைந்து சாலையின் நடுவே நிற்பது, தீப்பிடித்து எரிவது, விபத்துக்குள்ளாகி உயிர்ச்சேதம் ஏற்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
இந்த நிலையில், பெங்களூரின், சங்கர் நாக் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பி.எம்.டி.சி., பஸ், நேற்று காலை 7:30 மணியளவில், மெஜஸ்டிக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். சங்கர் நாக் பஸ் நிலையம் அருகில் சென்றபோது, பஸ்சின் பிரேக் திடீரென பழுதடைந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரம் இருந்த 'நந்தினி' பார்லர் ஐஸ்கிரீம் கடையின் தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு, உள்ளே புகுந்தது. அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, அசம்பாவிதம் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்து இறங்கிய பயணியர், அருகில் இருந்த சங்கர்நாக் பஸ் நிறுத்தத்துக்கு சென்று, வேறு பஸ்சில் சென்றனர்.
அதிகாரிகள் அங்கு வந்து, பஸ்சை பார்வையிட்டனர்.