/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.எம்.டி.சி.,யின் திவ்ய தரிசனம் புதிய வழித்தடங்கள் அறிமுகம்
/
பி.எம்.டி.சி.,யின் திவ்ய தரிசனம் புதிய வழித்தடங்கள் அறிமுகம்
பி.எம்.டி.சி.,யின் திவ்ய தரிசனம் புதிய வழித்தடங்கள் அறிமுகம்
பி.எம்.டி.சி.,யின் திவ்ய தரிசனம் புதிய வழித்தடங்கள் அறிமுகம்
ADDED : ஜூலை 14, 2025 05:31 AM
பெங்களூரு : பி.எம்.டி.சி.,யின் 'திவ்ய தரிசனம்' சுற்றுலா திட்டத்தில், இரண்டு புதிய வழித்தடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
பி.எம்.டி.சி., சார்பில் துவங்கப்பட்ட 'திவ்ய தரிசனம்' சுற்றுலா திட்டம், பொது மக்கள் இடையே ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து அடுத்தகட்டமாக 'ஏசி' வசதியுடன் கூடிய பஸ்சில் செல்ல, 'திவ்ய தர்ஷன் 5'; 'திவ்ய தர்ஷன் 6' என இரு வழித்தடம் அறிமுகம் செய்துஉள்ளது.
* திவ்ய தர்ஷன் 5ல், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, பேகூர் நாகேஸ்வரா கோவில், பெட்டதாசனபுரா கோட்டே திம்மராய சுவாமி கோவில், ஹூஸ்கூர் மத்துரம்மா கோவில், நாராயணகட்டா வரதராஜ சுவாமி சவுடேஸ்வரி கோவில்.
குட்டதி கேட் சுசில் தாம் ஜெயின் கோவில், முகலுார் பூவராஹா சுவாமி கோவில், சிக்கதிருப்பதி, குஞ்சூர் சானேஸ்வர் கோவில், அகரா ஸ்ரீ ஜெகந்நாத் கோவில் சென்று, இரவு 7:30 மணிக்கு மீண்டும் சென்ட்ரல் சில்க் போர்டில் வந்து நிற்கும்.
பெரியவர்களுக்கு 500 ரூபாயும், குழந்தைகளுக்கு 375 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* திவ்ய தரிசனம் 6ல், மெஜஸ்டிக் கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, மல்லேஸ்வரம் சர்க்கிள் மாரம்மா கோவில், வித்யாரண்யபுரா காளிகா துர்கா பரமேஸ்வரி கோவில், எலஹங்கா நியூ டவுன் அத்துார் லே - அவுட் காசி விஸ்வநாத் கோவில், என்.இ.எஸ்., சீனிவாசா கோவில், ஆவதி திம்மராய சுவாமி கோவில், ஆவதி ஷிருடி சாய்பாபா கோவில், தேவனஹள்ளி ஜெயின் கோவில், நாகபுரா லட்சுமி பூவராஹ சுவாமி கோவில் சென்று, மாலை 6:00 மணிக்கு மீண்டும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்தடையும்.
பெரியவர்களுக்கு 550 ரூபாயும்; சிறியவர்களுக்கு 400 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு www.mybmtc.com & www.ksrtc.in என்ற இணையத்தில் அல்லது 080 - 2248 3777 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.