தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் 10 ஏரிகளில் படகு சவாரி: கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டம்

 பெங்களூரில் 10 ஏரிகளில் படகு சவாரி: கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டம்

 பெங்களூரில் 10 ஏரிகளில் படகு சவாரி: கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டம்


ADDED : பிப் 15, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில், 10 ஏரிகளில் படகு சவாரி துவக்க, ஜி.பி.ஏ., எனப்படும், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில், ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளன.

பெங்களூரில் முன்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், தற்போது ஏரிகளின் எண்ணிக்கை, 183 ஆக குறைந்துள்ளது.

தற்போது, கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பத்து ஏரிகளில் படகு சவாரியை துவக்க திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக, கே.டி.சி.டி.ஏ., எனும், கர்நாடக குளம் பாதுகாப்பு மேம்பாட்டு ஆணையத்திற்கு, ஜி.பி.ஏ., கமிஷனர் மகேஷ்வர் ராவ் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த ஜன., 7ம் தேதி நடந்த கூட்டத்தில், மாநில தலைமை செயலர் ஷாலினியின் தெரிவித்த வழிகாட்டுதல்படி, இந்த கடிதம் எழுதப்படுகிறது. ஜி.பி.ஏ.,க்கு உட்பட்ட பகுதிகளில், 183 ஏரிகள் உள்ளன. அவற்றில் பத்து ஏரிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவற்றில், படகு சவாரி செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முன்மொழியப்பட்ட படகு வசதிகளை நிர் வகிக்கும் பொறுப்பு, கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகத்திடம் ஒப்படைக்கப்படும்.

படகு சவாரியால் கிடைக்கும் வருவாய், ஏரிகள் பராமரிப்பு, நீர் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும். டீசலில் இயங்கும் படகுகளுக்கு அனுமதியில்லை. மாசுபடுத்தாத மாற்று முறையில் இயங்கும் படகுகள் மட்டுமே பயன்படுத்தப்படும். நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பூஜ்ஜி ய மாசுபாட்டை உறுதி செய்யவும் நாங்கள் திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'கழிவுநீர் வரத்து நிறுத்தப்படும் வரை, படகு சவாரியை அனுமதிக்கக்கூடாது. கக்கதாசபுரா ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. கிட்டத்தட்ட, 10 ஆண்டுகளாக இங்கு புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்னும் முடிக்கப்படவில்லை. மேலும் பாதைகள், பாலம் அமைக்கும் பணிகளும் முடியவில்லை' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us