தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பச்சிளம் ஆண் குழந்தை உடல் கண்டெடுப்பு

 பச்சிளம் ஆண் குழந்தை உடல் கண்டெடுப்பு

 பச்சிளம் ஆண் குழந்தை உடல் கண்டெடுப்பு


ADDED : ஜூன் 17, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிக்கமகளூரு நகர கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நேற்று காலை பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடப்பதாக, சிக்கமகளூரு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துவங்கினர். பிளாஸ்டிக் பைக்குள் இருந்த குழந்தையின் உடலை மீட்டனர்.

பிரதே பரிசோதனை செய்வதற்காக குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது, குழந்தையின் தொப்புள் கொடியில் பிளாஸ்டிக் கிளிப் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அக்குழந்தை பிரசவத்தின் போது இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரித்தனர்.

பிரசவத்தின் போது இறந்த குழந்தையை இறுதி சடங்குகள் செய்வதற்கு பதிலாக, புதருக்குள் குழந்தையை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us