மாயமானதாக தேடப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் உடல் மீட்பு
மாயமானதாக தேடப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் உடல் மீட்பு
ADDED : ஏப் 03, 2026 03:52 AM

சித்ரதுர்கா: மாயமானதாக தேடப்பட்ட காங்கிரஸ் பிரமுகரின் உடல், முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.
சித்ரதுர்கா டவுன் கே.ஜி.கே.நகரில் வசித்தவர் சிவலிங்கப்பா, 50. காங்கிரஸ் பிரமுகர். உரக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம், 30ம் தேதி இரவு வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டுச் சென்றார். அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.
சிவலிங்கப்பா மாயமானதாக அவரது குடும்பத்தினர் சித்ரதுர்கா டவுன் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், சித்ரதுர்காவில் இருந்து ஹொலல்கெரே செல்லும் சாலையில், முகம் சிதைந்த நிலையில் சிவலிங்கப்பாவின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. அவரை யாரோ முகத்தை சிதைத்து கொன்றது தெரியவந்தது.
கொலையாளிகள் யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. அரசியல் காரணமா, தொழில் போட்டியா, பெண் விவகாரமா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.
