தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கலிபோர்னியாவில் மாயமான பெங்., மாணவர் உடல் மீட்பு

 கலிபோர்னியாவில் மாயமான பெங்., மாணவர் உடல் மீட்பு

 கலிபோர்னியாவில் மாயமான பெங்., மாணவர் உடல் மீட்பு


ADDED : பிப் 16, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆறு நாட்களுக்கு முன்பு மாயமான, பெங்களூரு மாணவர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

பெங்களூரின் கெங்கேரி அருகே ஸ்ரீகந்தகாவலு டி குரூப் லே - அவுட்டை சேர்ந்தவர் சாகேத் சீனிவாசய்யா, 22. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறு பொறியியல் முதுகலை பட்டம் படித்தார். இந்திய மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார்.

சாகேத்துடன் அறையில் தங்கி இருந்த இந்திய மாணவரான பனீத் சிங் கடந்த 9ம் தேதி சமூக வலைத்தள பதிவில், சாகேத் சீனிவாசய்யா காணாமல் போனது பற்றி பதிவிட்டு இருந்தார். இதையடுத்து கலிபோர்னியா போலீசார், சாகேத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் அருகில் உள்ள அன்சா ஏரியில் சாகேத் உடல் நேற்று மீட்கப்பட்டது.

இதை கலிபோர்னியா போலீசாரும் உறுதி செய்தனர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை துாதரகமும், சாகேத் இறந்த தகவலை உறுதிப்படுத்தி, அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தது.

சாகேத் மரணம் குறித்து அவருடன் தங்கி இருந்த பனீத் சிங் கூறியதாவது:

கடந்த சில தினங்களாகவே சாகேத் மன அழுத்தத்தில் இருந்தார். குறைவாக சாப்பிட்டார். சிப்ஸ் மட்டும் பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டார். கடைசியாக என்னிடம் அவர் பேசும் போது, மற்றவர்களை பற்றி கவலைப்படுவதை நான் நிறுத்தி விட்டேன்.

என்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறினார். அவரது பேச்சை கேட்டு ஜோக் செய்கிறார் என்று நினைத்து நான் சிரித்தேன். இப்படி முடிவெடுப்பார் என எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

படிப்பில் சிறந்து விளங்கிய சாகேத், சென்னை ஐ.ஐ.டி.,யிலும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us