/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துங்கபத்ரா கால்வாயில் விழுந்த மாணவி உடல் மீட்பு
/
துங்கபத்ரா கால்வாயில் விழுந்த மாணவி உடல் மீட்பு
ADDED : ஜூலை 24, 2025 04:51 AM

கொப்பால்: கங்கவாதி துங்கபத்ரா அணையின் கால்வாயில் தவறி விழுந்த பள்ளி மாணவியின் சடலம், நேற்று மீட்கப்பட்டது.
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் பசவண்ணா முகாம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாரியப்பா யாதவ். இவரது மகள் சைத்ரா, 13. காரேகல்லப்பன்னாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நாரியப்பா யாதவ், ஆடுகளை மேய்த்து வருகறிார். இதற்காக துங்கபத்ரா அணையின் அருகில் உள்ள காரேகல்லப்பா மலை அடிவாரத்தில் தற்காலிகமாக தங்கி உள்ளனர்.
வழக்கமாக, அணையின் இடதுபுற கால்வாயில் சிறிய பாலத்தை கடந்து, சைத்ரா பள்ளிக்குச் செல்வார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்ல நேரமானதால், குறுக்கு வழியில் செல்லத் திட்டமிட்ட சைத்ரா, பாலத்தில் செல்வதற்கு பதிலாக, கால்வாயின் குறுக்கே போடப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் மீது நடந்து சென்றார்.
அப்போது கால் தவறி, நீரில் விழுந்த அவர், அடித்துச் செல்லப்பட்டார்.
இதை பார்த்த அவரது மைத்துனர் தொட்ட நாரியப்பா, கால்வாயில் குதித்து தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. கங்காவதி ரூரல் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்று மதியம் கரகடகியின் பெவினால் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட் ட துங்கபத்ரா நதிக்கரையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.