/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சீக்கியர்களின் குருத்வாராவுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி
/
சீக்கியர்களின் குருத்வாராவுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி
சீக்கியர்களின் குருத்வாராவுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி
சீக்கியர்களின் குருத்வாராவுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி
ADDED : ஆக 30, 2025 03:28 AM

ஹலசூரு: ஹலசூரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு 'இ-மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் பெயர் பெற்ற பெங்களூரு நகருக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள 40 பள்ளிகளுக்கும்; கடந்த மாதம் 27ம் தேதி துணை முதல்வர் சிவகுமார் அலுவலகத்துக்கும்; கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கும்; கடந்த 22ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இவ்விடங்களில் போலீசார் பல மணி நேரம் தீவிர சோதனை நடத்தி, புரளி என்பதை உறுதி செய்தனர். மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில், சீக்கியர்கள் வழிபடும் குருத்வார் அமைந்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு, ராஜா கிரி என்பவர் பெயரில், குருத்வார் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் கடிதம் வந்திருந்தது.
அதில், 'குருத்வாரின் சமையல் அறை, கழிப்பறையில் நான்கு ஆர்.டி.எக்ஸ்., ஐ.இ.டி.,க்கள் வைக்கப்பட்டுள்ளன. எட்டு மணி நேரத்துக்குள் அங்கிருந்து அனைவரும் சென்றுவிடுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குருத்வாரா மேலாளர் குஷால்பால் சிங், ஹலசூரு போலீசில் புகார் அளித்தார். போலீசார், மோப்ப நாய் படையுடன் அங்கு வந்தனர். பல மணி நேரம் தேடுதலுக்கு பின், புரளி என்பதை உறுதிபடுத்தினர். மின்னஞ்சல் அனுப்பியவரின் 'ஐ.பி.,' எண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குருத்வாருக்கு வெடிகுண்டு மிரட்டல் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், அச்சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.