UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
பெலகாவி: பெலகாவி மாவட்ட நீதிமன்றத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
பெலகாவி மாவட்ட நீதிமன்றத்துக்கு, நேற்று மதியம் இ – மெயில் வழியாக, வெடி குண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு வைத்து நீதிமன்றத்தை தகர்ப்பதாக மிரட்டியிருந்தனர்.
நீதிமன்ற ஊழியர்கள், உடனடியாக பெலகாவி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனையிட்டனர். வெடிபொருள் ஏதும் தென்படவில்லை. பொய்யான மிரட்டல் என்பது உறுதியானது.
பொய்யான மிரட்டல் விடுத்தவர்களை, போலீசார் தேடுகின்றனர். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில், சிறிது நேரம் பதற்ற சூழ்நிலை நிலவியது.
