தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காங்., ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதி

காங்., ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதி

காங்., ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதி


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘‘பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி தற்காலிகமானது அல்ல. காங்கிரசின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றுபட்டு போராடுவோம்,’’ என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் பா.ஜ., – ம.ஜ.த., தலைவர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் குமாரசாமி அளித்த பேட்டி:

பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடோ அல்லது குழப்பமோ இல்லை. நான்கு எம்.எல்.சி., தேர்தல் போன்று இடைத்தேர்தல்கள், ஜி.பி.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் இணைந்தே பணியாற்றுவோம்.

ஹிரியூர், தார்வாட் இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் போட்டியிடுவார். எங்களுக்கு வெற்றி தான் முக்கியம்.

காங்கிரசின் ஆட்சிக்கு முடிவுகட்ட திறமையான வேட்பாளரை நிறுத்துவோம்.

மாநிலம், மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைப்போம். எங்களுக்கு முதல்வர் வேட்பாளர் முக்கியமல்ல. தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவதே முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:

விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள், விவசாயிகள், ஏழைகள், ஆஷா சுகாதாரம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பிரச்னைகள் தொடர்பாக பெலகாவி குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ., – ம.ஜ.த., இணைந்து கேள்வி எழுப்புவோம்.

கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களாக பயனாளிகளுக்கு பணம் செல்லவில்லை. கடந்த 10 நாட்களாக ஆஷா சுகாதார பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுகாதார துறை அமைச்சர், முதல்வரின் நடத்தை ஆணவத்தின் உச்சம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us