UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: கூகுள் மேப்பில் தேடி, துங்கா ஆற்றுக்கு சென்ற பெங்களூரின் நான்கு இளைஞர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவின் மஹிஷி கிராமத்துக்கு வந்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின், கிராமத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை பற்றி கூகுளில் தேடிய போது, துங்கா ஆறு இருப்பது தெரிந்தது.
மேப் வரைபடத்தை பார்த்து, ஆறு இருக்கும் இடத்துக்கு கார்த்திக், 31, நகுல், 19, பவன், 30, சேத்தன், 19, ஆகியோர் நேற்று மதியம் சென்றனர்.
ஆற்றை பார்த்ததும் நீரில் இறங்கி, ஆர்வத்தோடு விளையாடினர்.
அப்போது ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். அவரை காப்பாற்றும் முயற்சியில், மற்ற மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
