/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கதக் கலெக்டர் அலுவலகத்துக்கு குண்டு மிரட்டலால் பரபரப்பு
/
கதக் கலெக்டர் அலுவலகத்துக்கு குண்டு மிரட்டலால் பரபரப்பு
கதக் கலெக்டர் அலுவலகத்துக்கு குண்டு மிரட்டலால் பரபரப்பு
கதக் கலெக்டர் அலுவலகத்துக்கு குண்டு மிரட்டலால் பரபரப்பு
ADDED : டிச 16, 2025 05:15 AM

கதக்: கதக் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கதக் மாவட்ட கலெக்டர் அலுவலக மின்னஞ்சலுக்கு, நேற்று காலை 10:00 மணியளவில், 'அர்ணா அஸ்வின் சேகர்' என்ற இணைய முகவரியில் இருந்து தகவல் வந்தது.
அதில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகத்தினுள் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
மோப்ப நாய்களுடன் அங்கு வந்த போலீசாரும், நிபுணர்களும், கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் இரண்டு மணி நேரம் தேடினர்.
தேடுதல் முடிவில், போலி மிரட்டல் என்பதை உறுதி செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். கதக் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.