/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிந்து மதம் குறித்து அவதுாறு கருத்து வெளியிட்டவர் கைது
/
ஹிந்து மதம் குறித்து அவதுாறு கருத்து வெளியிட்டவர் கைது
ஹிந்து மதம் குறித்து அவதுாறு கருத்து வெளியிட்டவர் கைது
ஹிந்து மதம் குறித்து அவதுாறு கருத்து வெளியிட்டவர் கைது
ADDED : டிச 16, 2025 05:14 AM
மங்களூரு: வெளிநாட்டில் இருந்து கொண்டே ஹிந்து மதம் குறித்து சமூக வலைதளத்தில் அவமதிப்பாக கருத்துகளை வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி:
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் உளாயிபெட்டுவில் வசிப்பவர் அப்துல் காதர் நேஹாத், 27. இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் இருக்கும் போது, அக்டோபர் 11ல், இன்ஸ்டாகிராமில் ஹிந்து மதத்தை பற்றி, அவமதிப்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதை கவனித்த பஜ்ஜே போலீசார், தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்தனர். இதை வெளியிட்டது யார் என கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரித்த போது, சவுதி அரேபியாவில் வசிக்கும் அப்துல் காதர் நேஹாத் என்பதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்ய காத்திருந்தனர். அவர் வருகையை கண்காணித்தனர்.
இதற்கிடையில் நேற்று முன் தினம் அவர், சவுதி அரேபியாவில் இருந்து, கேரளாவின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பஜ்ஜே போலீசார், அங்கு சென்று காத்திருந்தனர். அவர் விமானத்தில் இருந்து இறங்கியதும், கைது செய்து, மங்களூருக்கு அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

