/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார், பீதர் கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
/
கோலார், பீதர் கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கோலார், பீதர் கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கோலார், பீதர் கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ADDED : டிச 13, 2025 06:55 AM
கோலார்: கோலார், பீதர் கலெக்டர் அலுவலகங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் பள்ளி, கல்லுாரிகள், விமானம், ரயில், பஸ் நிலையங்கள், உயர் நீதிமன்றத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம், கடந்த சில மாதங்களாக அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில் கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலக மின்னஞ்சலுக்கு, நேற்று காலை வந்த குறுந்தகவலில், மதியம் 2:00 மணிக்கு குண்டுவெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த, கலெக்டர் அலுவலக ஊழியர்கள், கோலார் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அலுவலக ஊழியர்களை வெளியேற்றி விட்டு, ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டோ, சந்தேகம்படும்படியான பொருட்களோ சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.
ஆனாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று மாலை வரை, ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, கலெக்டர் அலுவலகத்திற்குள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதுபோல பீதர் கலெக்டர் அலுவலகத்திற்கும், மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அங்கும் சோதனை செய்த போது புரளி என்று தெரிந்தது.

