அரசு மருத்துவமனை வளாகத்தில் மண்டை ஓட்டால் மக்கள் பீதி
அரசு மருத்துவமனை வளாகத்தில் மண்டை ஓட்டால் மக்கள் பீதி
ADDED : டிச 13, 2025 06:55 AM
அ நிறம் | அளவு
நெலமங்களா: பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் தாலுகா அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் வளாகத்தில் குப்பை கொட்ட தனி இடம் உள்ளது.
இந்த இடத்தில் நேற்று காலையில் மண்டை ஓடு கிடந்ததை பார்த்து, பொது மக்களும், நோயாளிகளும் பீதி அடைந்தனர். அங்கு வந்த நெலமங்களா போலீசார், மண்டை ஓட்டை எடுத்து சென்றனர்.
மண்டை ஓட்டை இங்கு போட்டது யார் என்று விசாரணை துவங்கி உள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது வேறு யாராவது வீசி சென்றனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனர்.
