/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 04, 2025 11:26 PM

தட்சிண கன்னடா: மங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாலின் தெரலகட்டேயில் கனச்சூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. நேற்று காலை இம்மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கண்ட மர்ம நபர், 'மருத்துவமனைக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. எந்நேரத்திலும் வெடிக்கும்' என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள், உடனடியாக கொனஜ்ஜே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், ஊழியர்கள், பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தினர்.
சோதனைக்கு பின், இது புரளி என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மொபைல் போனில் இருந்து வந்த எண்ணை வைத்து, நபரை தேடி வருகின்றனர்.
மருத்துவமனை முன் நின்றிருந்த போலீஸ் வாகனம்.