தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடுப்பி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

 உடுப்பி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

 உடுப்பி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்


ADDED : ஜூன் 22, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுப்பி: உடுப்பி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததால், பரபரப்பு ஏற்பட்டது.

உடுப்பி மாவட்ட நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு, 'இன்குலாப் ஜிந்தாபாத் டி.என்.எல்.ஏ.மாறன்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில், 'நீதிபதிகள் அறைகள், கழிப்பறைகளில் இரண்டு ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த குண்டுகள் மதியம் 2:00 மணிக்கு வெடிக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு, மோப்ப நாய்களுடன் போலீசார் வந்தனர். நீதிமன்ற கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

நீதிமன்றத்தின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேர சோதனைக்கு பின், இது வதந்தி என தெரிந்தது. மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து, உடுப்பி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us