/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கலெக்டர் ஆபீஸ்களுக்கு குண்டு மிரட்டல் சாம்ராஜ் நகர், ராய்ச்சூரில் பரபரப்பு
/
கலெக்டர் ஆபீஸ்களுக்கு குண்டு மிரட்டல் சாம்ராஜ் நகர், ராய்ச்சூரில் பரபரப்பு
கலெக்டர் ஆபீஸ்களுக்கு குண்டு மிரட்டல் சாம்ராஜ் நகர், ராய்ச்சூரில் பரபரப்பு
கலெக்டர் ஆபீஸ்களுக்கு குண்டு மிரட்டல் சாம்ராஜ் நகர், ராய்ச்சூரில் பரபரப்பு
ADDED : மே 02, 2025 11:13 PM

பெங்களூரு: சாம்ராஜ்நகர், ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது.
கர்நாடகாவில் சமீப நாட்களாக, வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வருகின்றன. அரசு, தனியார் மருத்துவமனைகள், மருத்துவ, பொறியியல் கல்லுாரிகள், பிரபலமான பள்ளிகள், விமான நிலையங்கள் உட்பட, பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.
தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.
சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் அலுவகத்துக்கு, நேற்று காலை இ - மெயில் மூலம், மர்மநபரிடம் இருந்து மிரட்டல் வந்தது. 'மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வெடிகுண்டு பொருத்தியுள்ளோம்.
'இன்று (நேற்று) மதியம் 3:00 மணிக்கு வெடிக்கும்' என, கூறப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அலுவலக ஊழியர்களை வெளியே அனுப்பினர்.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களின் உதவியுடன், கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டது.
எங்கும் வெடிபொருள் தென்படவில்லை. கலெக்டர் அலுவலகத்துக்கு எஸ்.பி., கவிதா, நேரில் வந்து பார்வையிட்டார்.
இது குறித்து, சாம்ராஜ் நகரின், சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
போலீசாரும் இ - மெயில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம் ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், நேற்று காலை இ - மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அங்கு வந்த போலீசார், சோதனை நடத்தினர். இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது.
இ - மெயில் வந்த முகவரியை வைத்து, மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.
ஒரே நாளில் இரண்டு மாவட்ட கலெக்டர்களின் அலுவலகங்களுக்கு மிரட்டல் வந்திருப்பதால், பதற்றமான சூழல் நிலவியது.