/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எலும்பை ஊடுருவும் குளிர்: நடுங்கும் கர்நாடக மக்கள்
/
எலும்பை ஊடுருவும் குளிர்: நடுங்கும் கர்நாடக மக்கள்
எலும்பை ஊடுருவும் குளிர்: நடுங்கும் கர்நாடக மக்கள்
எலும்பை ஊடுருவும் குளிர்: நடுங்கும் கர்நாடக மக்கள்
ADDED : டிச 23, 2025 06:53 AM

பெங்களூரு: எலும்பை ஊடுருவும் வகையில் குளிர் நிலவுவதால், கர்நாடக மக்கள் நடுங்குகின்றனர்.
கர்நாடகாவில் வழக்கமாக ஆண்டுதோறும், டிசம்பர் முதல் ஜனவரி வரை குளிர்காலமாக உள்ளது. இந்த ஆண்டும் குளிர்காலம் துவங்கி விட்டது. ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இம்முறை மாநிலம் முழுதும் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
குறிப்பாக, வடமாவட்ட மக்களை குளிர் வாட்டி எடுக்கிறது. குளிர் நகரம் என்று பெயர் பெற்றுள்ள பெங்களூரிலும், குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் குளிர் அதிகரிப்பதால், மக்கள் நடுக்கத்தில் உள்ளனர்.
முன்பெல்லாம் அதிகாலையில் குளிர் வாட்டினாலும், காலை 8:00 மணிக்கு மேல் குளிரின் தாக்கம் குறைந்து விடும். தற்போது வெயில் அடித்தாலும் கூட குளிரின் தாக்கம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் ஜெர்கின், ஸ்வெட்டர் அணிந்தபடி செல்வதை பார்க்க முடிகிறது. பல சாலைகளில் காலை 8:00 மணிக்கு கூட மூடுபனியாக உள்ளது.
இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். எதிரே என்ன வாகனங்கள் வருகிறது என்பதை கூட கணிக்க முடியாத நிலை உள்ளது. குளிர் காரணமாக, அதிகாலையில் பஸ் சேவைகள் துவங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. வாடகை கார்கள், ஆட்டோக்களும் காலையில் குறைவாக இயங்குவதால், ரயில், விமான நிலையங்களுக்கு செல்லும் பயணியர் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.
குழந்தைகள், பெரியவர்களுக்கு பனியின் தாக்கத்தால் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன. வீடுகளின் தரைகள் ஐஸ் கட்டி போன்று இருப்பதால், வீட்டிற்குள் ஷாக்ஸ் அணிந்தபடியே மக்கள் நடக்கின்றனர். ஆனாலும், எலும்பை ஊடுருவும் வகையில் குளிர் நிலவுவதால், மக்கள் நடுங்குகின்றனர்.
நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை 24 மணி நேர நிலவரப்படி, வடமாவட்டமான பீதரில் குறைந்தபட்சமாக 7.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. பாகல்கோட்டில் 8.5; தார்வாடில் 8.6; பெலகாவியில் 9.1; கதக்கில் 9.5.
கலபுரகியில் 9.6; ராய்ச்சூரில் 9.8 டிகிரி செல்ஷியல் குறைந்த வெப்பநிலை பதிவானது. பெங்களூரு நகரில் 10.9; பெங்களூரு தெற்கில் 10.5; பெங்களூரு ரூரலில் 10.7; கோலாரில் 10.8; மைசூரில் 8.7 டிகிரி செல்ஷியல் குறைந்த வெப்பநிலை பதிவாகி இருந்தது. வரும் நாட்களிலும் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிகிறது.

