/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசராவை துவக்கி வைக்கிறார் 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக்
/
மைசூரு தசராவை துவக்கி வைக்கிறார் 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக்
மைசூரு தசராவை துவக்கி வைக்கிறார் 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக்
மைசூரு தசராவை துவக்கி வைக்கிறார் 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக்
ADDED : ஆக 22, 2025 11:12 PM

பெங்களூரு: ''இந்தாண்டு மைசூரு தசராவை, 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைப்பார்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்தாண்டு மைசூரு தசராவை துவக்கி வைக்கும்படி, காங்கிரஸ் எம்.பி., சோனியாவுக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளதாகவும், நேரில் சென்று தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த செய்தியை மறுத்துள்ள முதல்வர் அலுவலகம், 'அத்தகைய திட்டம் அரசுக்கு இல்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
இந்தாண்டு தசரா விழாவை, 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைப்பார். அவரது படைப்பு 'ஹிருதய தீபா' எனும் இதய தீபம், 'புக்கர்' விருது பெற்றுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண், 'புக்கர்' விருது பெ ற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள், கன்னட மொழிக்கான பல போராட்டங்களில் பங்கேற்றவர். எனவே, இந்தாண்டு தசராவை துவக்கி வைக்க, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் முறைப்படி அழைப்பிதழ் வழங்குவர். அதுபோன்று விமான சாகச நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதமும் எழுதி உள்ளேன். தசராவில் பங்கேற்க அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீஹாரில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேரணி நடத்த உள்ளார். இப்பேரணியில் பங்கேற்க, ஆக., 29ம் தேதி பீஹார் செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.