/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட சிறுவன் கைது
/
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட சிறுவன் கைது
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட சிறுவன் கைது
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட சிறுவன் கைது
ADDED : ஜூலை 27, 2025 05:06 AM
தங்கவயல்: பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட சிறுவனை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்த னர்.
பேத்தமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தியாவர ஹள்ளி கிராமத்தில் வசித்து வந்த 15 வயது சிறுவன், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளான். இதை உறுதி செய்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று முன்தினம் சிறுவனை கைது செய்தனர்.
ஒரு நாள் முழுதும் விசாரணை நடத்திய பின், நேற்று பேத்தமங்களா போலீசி டம் சிறுவனை என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒப்படைத்தனர். தேச துரோக செயல்க ளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறுவனை தங்கவயலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள் ளியில் அடைத்தனர்.
இச்சிறுவன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு பேத்தமங்களா அருகே ராமகுப்பம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். இதன் பின், பெங்களூரு மேடஹள்ளிக்கு குடும்பத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர். மேடஹள்ளியில் சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த குடும்பம், தற்போது தியாவரஹள்ளி கிராமத்தில் குடியேறி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த சிறுவன், 20 நாட்களுக்கு முன்பு தான் பேத்தமங்களாவில் சிக்கன் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சிறுவனின் நடவடிக்கைகளை உள்துறை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தது தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.