ADDED : செப் 08, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
உத்தரஹள்ளி: பெங்களூரு உத்தரஹள்ளியை சேர்ந்தவர் சுபலதா. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று காலை, மூத்த மகனை பள்ளியில் விட்டு விட்டு, இளைய மகன் பாவினை மற்றொரு பள்ளியில் விட சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகன ஓட்டி, சுபலதா வாகனத்தின் மீது மோதினார். இதனால், நிலை தடுமாறி குழந்தையுடன் சுபலதா கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி, குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதில் பாவின் சம்பவ இடத்தில் உயிரிழந் தார். விபத்தை ஏற்படுத்திய இரு சக்கர வாகன ஓட்டியும், டிப்பர் லாரி ஓட்டுநரும் வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு, தப்பியோ டி விட்டனர்.
கெங்கேரி போக்குவரத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
