தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ரசாயன வாளியில் விழுந்த சிறுவன் பலி

ரசாயன வாளியில் விழுந்த சிறுவன் பலி

ரசாயன வாளியில் விழுந்த சிறுவன் பலி


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீராமபுரம்: விளையாடும் போது, ரசாயனம் நிரம்பிய வாளியில் விழுந்ததில், பலத்த காயமடைந்த சிறுவன், 12 நாட்களுக்கு பின் நேற்று உயிரிழந்தார்.

பெங்களூரு எல்.என்.புராவில் வசித்தவர் ரமேஷ்குமார். இவர் மனைவி, 8 வயது மகள், ஓராண்டு 9 மாதங்கள் ஆன மகன் சுப்ரமணியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டு அருகிலேயே, காப்பர் மேக்கர் பேக்டரி உள்ளது. நவம்பர் 2ம் தேதியன்று, காலை 11:00 மணிக்கு சிறுவன் தன் அக்காவுடன், இந்த பேக்டரி அருகில் விளையாடினார்.

அப்போது எதிர்பாராமல், அங்கிருந்த ரசாயனம் நிரப்பப்பட்ட வாளியில் சுப் ரமணி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், அங்கிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கூடுதல் சிகிச்சைக்கா க தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

ஸ்ரீராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us