தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கே.பி.எஸ்.சி., முறைகேடு 4 பேர் மீது 8,400 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கே.பி.எஸ்.சி., முறைகேடு 4 பேர் மீது 8,400 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கே.பி.எஸ்.சி., முறைகேடு 4 பேர் மீது 8,400 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., எனும் அரசு ஊழியர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடு தொடர்பாக, அதன் தலைவர் உட்பட நான்கு பேர் மீது, அமலாக்க துறை நீதிமன்றத்தில், 8,400 பக்கங்களில் அமலாக்க துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

நடப்பாண்டு ஜனவரியில் கால்நடை மருத்துவர் தேர்வை கே.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், எஸ்.ஐ.டி., மற்றும் ஈடி எனும் அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கைது



விசாரணைக்கு பின், தேர்வு நடந்த போது தேர்வு அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் கங்வார், இடைத்தரகர் பசவராஜ் கன்னிலே கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர், உறுப்பினர் கீதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த நால்வர் மீது அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில், 8,400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்க துறையினர் தாக்கல் செய்தனர்.

வாக்குமூலங்கள்



இதில், 50க்கும் மேற்பட்ட சாட்சிகள், தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்களின் வாக்குமூலங்கள், இடைத்தரகர் பசவராஜ் கன்னிலோ, அவரது கூட்டாளிகள் தேர்வுக்கு முந்தைய நாள், தேர்வர்களுக்கு விடைகளுடன் கூடிய வினாத்தாள்களை கொடுத்தனர்.

அவற்றை மனப்பாடம் செய்ய வைக்க தேவனஹள்ளி அருகில் உள்ள சொகுசு விடுதியில் இருந்தபோது, அங்கு பணியாற்றிய ஊழியர்கள், தேர்வர்களிடம் இருந்து லஞ்ச பணத்தை மாற்றிய பீதர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு லஞ்ச பணம் கொடுத்த தேர்வர்கள், அவரின் பெற்றோர் வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன.

அதுபோல, ஞானேந்திரகுமாரின் நண்பர், 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை வாங்கியது தொடர்பான ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை, வங்கி ஊழியர்கள் மற்றும் நகைக்கடை ஊழியர்களின் வாக்குமூலங்கள், கங்குவார் தனது நண்பருடன் நகை கடைக்கு செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள், புகைப்படங்கள், கைதான நான்கு பேருக்கு சொந்தமான கோடிக்கக்கான ரூபாய் மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துகளின் விபரங்கள் அடங்கி உள்ளதாக, தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us