UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் பனம்பூர் கடற்கரை அருகில் உள்ள உணவகத்தில், வங்கதேசத்தினர் பணியாற்றுவதாக, பனம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று காலை அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவரை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் அதிகாரப்பூர்வமான எந்த ஆவணங்களும் இல்லை.
இருவரையும் கைது செய்த போலீசார், சட்ட விரோதமாக வசித்த வெளிநாட்டவரை அடைத்து வைக்கும் மையத்திற்கு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
