ADDED : ஏப் 07, 2025 10:23 PM

ராய்ச்சூர்; ராய்ச்சூர் மாவட்டம், கணடாலா கிராமத்தில் பஞ்சமுகி ஆஞ்சநேய சுவாமி மஹோத்சவம் நேற்று நடந்தது. இத்திருவிழாவில் பங்கேற்க தெலுங்கானா மாநிலத்தின் கட்வாலை சேர்ந்த அஞ்சலி, 17, என்ற சிறுமியும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் அம்மிகனுார் கிராமத்தை சேர்ந்த ரகு, 14, என்ற சிறுவனும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
நேற்று காலை கிராமத்தில் உள்ள ராஜலபண்டா கால்வாயின் படிக்கட்டில் நின்றபடி, அஞ்சலி குளித்துக் கொண்டிருந்தார். திடீரென வழுக்கி, கால்வாய்க்குள் விழுந்தார். நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை.
அதுபோன்று, ரகுவும் இதே கால்வாயில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், இடப்பனுார் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், சிறுவன் ரகுவின் உடலை மீட்டனர். சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
