/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.பி.எம்., மாணவி கொலை 'ராகிங்' காரணம் என புகார்
/
பி.பி.எம்., மாணவி கொலை 'ராகிங்' காரணம் என புகார்
பி.பி.எம்., மாணவி கொலை 'ராகிங்' காரணம் என புகார்
பி.பி.எம்., மாணவி கொலை 'ராகிங்' காரணம் என புகார்
ADDED : நவ 25, 2025 05:57 AM

நெலமங்களா: தோழியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இளம் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், அன்னமயா மாவட்டத்தின் பிக்கிம்வரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ரெட்டப்பா - ஜெகதாம்பா தம்பதி மகள் தேவிஸ்ரீ, 21. பெங்களூரு, தம்மேனஹள்ளியில் தங்கியிருந்த இவர், ஆச்சார்யார் கல்லுாரியில் பி.பி.எம்., இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், நண்பர் பிரேம் வர்த்தனுடன், தன் தோழி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது தந்தை போன் செய்தபோது, சிறிது நேரம் கழித்து பேசுவதாக கூறி, மொபைல் போனை வைத்து விட்டார்.
நீண்ட நேரமாகியும் மகள் போன் செய்யாததால், மீண்டும் அவரது தந்தை போன் செய்தார். ஆனால், தேவிஸ்ரீ போனை எடுக்கவில்லை. மகளின் மற்ற தோழிகளுக்கும் போன் செய்தபோது, 'தங்களுடன் இல்லை' என்று கூறியுள்ளனர்.
பதற்றம் அடைந்த அவர், பெங்களூரில் வசித்து வரும் சகோதரர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் நேற்று காலையில், தோழியின் அறைக்கு சென்று பார்த்தபோது, தேவிஸ்ரீ இறந்து கிடந்தார்.
மாதநாயகனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேம் வர்த்தன் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், 'தேவிஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் அல்லது மூச்சு திணறடித்து கொன்றிருக்கலாம்.
எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. பிரேம் வர்த்தன் பிடிபட்ட பிறகே காரணம் தெரியவரும்' என்று போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் பெரியப்பாவும், பெரியம்மாவும் கூறியதாவது:
நேற்று முன்தினம் காலை, தேவிஸ்ரீயின் தந்தை போன் செய்துள்ளார். பின்னர் பேசுவதாக கூறி, போனை தேவிஸ்ரீ கட் செய்துவிட்டார். அதன்பின் அவர் போன் எடுக்கவில்லை. தோழி அழைத்ததாக சென்றார். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
எங்கள் மகளை கல்லுாரியில் படிக்கும் இளைஞர் ஒருவர், ராகிங் செய்து வருவதாகவும், தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் மூன்று மாதங்களுக்கு முன் தெரிவித்தார். அப்போதே, கல்லுாரி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

