/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் தாலுகா ஆபீஸ் முன் பிராமணர்கள் போராட்டம்
/
தங்கவயல் தாலுகா ஆபீஸ் முன் பிராமணர்கள் போராட்டம்
ADDED : ஏப் 23, 2025 07:47 AM

தங்கவயல் : கர்நாடகாவில் கடந்த 16, 17ம் தேதிகளில் இன்ஜினியரிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நடந்தது. சில இடங்களில் மாணவர்களின் பூணுாலை அதிகாரிகள் அகற்றியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதை கண்டித்து தங்கவயல் தொகுதியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிராமணர்கள் நேற்று, தாலுகா அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
'பூணுால் எங்கள் சமூக சின்னம். அதை அகற்றியது, மத சுதந்திரத்தை மீறி உள்ளது. இதுபோன்ற அத்துமீறல்கள் முடிவுக்கு வரவேண்டும்.
எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' என்று எச்சரித்தனர். பின், தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கர்நாடக மாநில ஹிந்து அறநிலையத் துறை அர்ச்சகர் மற்றும் ஆன்மிக சங்க அமைப்பாளர் குரு தீட்சித், சனாதன தர்ம சபா தலைவர் மஞ்சுநாத், செயலர் தேஷ் பாண்டே, தங்கவயல் பிராமணர்கள் சங்க செயலர் நாராயணமூர்த்தி, ஸ்ரீ சுக்லா யஜுர்வேத சேவா டிரஸ்ட் செயலர் சி.ஏ.முரளிதர் ராவ்.
புரோகிதர்கள் சங்கத் தலைவர் மஞ்சுநாத் தீட்சித், ரமேஷ் வெங்கடாசலபதி, ராமகிருஷ்ணா, நடராஜ் அய்யர், ராஜசேகர் நாகராஜ், பாலாஜி, ஸ்ரீராம் விஸ்வநாத், வெங்கட்ராம் பிரசாத், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், சங்கர மடம் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

