/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவமனைக்கு வந்த நபரின் மூளை செயலிழப்பு
/
மருத்துவமனைக்கு வந்த நபரின் மூளை செயலிழப்பு
ADDED : ஜூலை 03, 2025 05:12 AM
பெங்களூரு: இதய நோய் ஏற்பட்டு நடந்தே மருத்துவமனைக்குச் சென்ற ஒருவருக்கு, சில நிமிடங்களில் மூளை செயலிழந்தது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் நகரில் வசித்தவர் கோனப்பா, 52. இவர் நேற்று காலை எழுந்த பின், சுறுசுறுப்பாகவே நடமாடினார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிகிச்சை பெறும் நோக்கில், வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நடந்தே சென்றார்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். சிகிச்சை அளிக்க தயாரான நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு படுக்கையில் மயங்கினார். அவரை தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
அதற்காக தயாரான நிலையில், அவரது மூளை செயலிழந்தது. அவர் நடந்து மருத்துவனைக்கு வரும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதை கண்டு குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.