தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மணமகன் மீதான வழக்கால் வெறுப்பு: திருமணத்தை நிறுத்திய மணமகள்

 மணமகன் மீதான வழக்கால் வெறுப்பு: திருமணத்தை நிறுத்திய மணமகள்

 மணமகன் மீதான வழக்கால் வெறுப்பு: திருமணத்தை நிறுத்திய மணமகள்


ADDED : மார் 01, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: திருமண மண்டபம் வரை வந்த மணமகள், முகூர்த்த நேரத்தில் திருமணம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு, மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகாவை சேர்ந்தவர் தீக்ஷித், 28. இவருக்கும், பாளே ஹொன்னுாரில் வசிக்கும் இளம் பெண்ணுக்கும், திருமணம் நிச்சயமானது. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், சிருங்கேரியின் ஈடிகா சமுதாய பவனில் நேற்று முன்தினம் திருமணம் நடக்கவிருந்தது.

உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். தாலி கட்டும் நேரம் நெருங்கிய நிலையில், மணமகள் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மறுத்தார்.

மணமகன் தீக்ஷுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதுமட்டுமின்றி, அவர் மீது பாலியல் பலாத்காரம் வழக்கும் பதிவாகியுள்ளது. இவ்விஷயம் மண்டபத்துக்கு வந்த பின்னரே, மணமகளுக்கு தெரியவந்தது. வெறுப்படைந்த அவர், தீக்ஷித்தை திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை என்று கூறினார்.

பெற்றோரும், உறவினர்களும் அவரின் மனதை மாற்ற முயற்சித்தும் பலன் இல்லை. திருமணம் செய்ய மறுத்து, மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us