ADDED : மே 23, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் -- பேத்தமங்களா சாலையில், கிருஷ்ணாபுரம் அருகே நடந்து வரும் பாலம் கட்டுமான பணிகளை, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணாபுரம் அருகே உள்ள தற்போதைய பாலம், வளைவு பகுதியில் மிகவும் குறுகலாக அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
இதை கருதி, பழைய பாலத்தை இடித்து அகற்றி, புதிய பாலம் அமைத்தல், வளைவு சாலையை நேர் வழி ஆக்குதல், இருவழி சாலையாக மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக, 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் வருவதால், மழை நீர் ஓட்டத்திற்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு, எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
